திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (15:12 IST)

ரூ.921 கோடி சொத்து மதிப்பு கொண்ட சுயேட்சை வேட்பாளர்

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த  நிலையில்,  மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கன. வேழவேந்தனுக்கு ரூ. 921 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக படிவத்தில் பூர்த்தி செய்துள்ளார்.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் அவர்  தனது கணிப்பொறி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர், ''தான் எம்.சி.ஏ படித்துள்ளதாகவும், தன் கணிப்பொறி திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதன் முலம் 25 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க முடியும் எனவும், இந்த பிராஜக்டை அரசுடைமை  ஆக்கப்பட வேண்டும் என்றும், தான் ஒரு ஜமீன் பரம்பரை ''என்று தெரிவித்துள்ளார்.