1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (07:44 IST)

ஆந்திர முதல்வர் மீது கல் வீசித் தாக்குதல்! நெற்றியில் காயம் ஏற்பட்டதால் பரபரப்பு!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது அவர் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். மேலும் அவர் அந்த பகுதியில் ரோடு ஷோவில் சென்று கொண்டிருந்த நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து முதல் கட்ட விசாரணையில் பூக்களை எரிவது போல் அதனுடன் சேர்த்து கற்களையும் மர்மநபர்கள் எரிந்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த கல்வீச்சு தாக்குதல் காரணமாக ஜெகன்மோகன் ரெட்டி நெற்றியில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva