சொந்தமா காரும் இல்ல.. ஒரு வீடும் இல்ல..! ராகுல்காந்தி சொத்து மதிப்பு இவ்வளவுதானா?
மக்களவை தேர்தலில் மீண்டும் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடும் நிலையில் அவரது சொத்துமதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. கேரளாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ளது. முந்தைய தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றிபெற்ற நிலையில் இந்த தேர்தலிலும் வயநாட்டில் போட்டியிடுகிறார்.
இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் சொத்துமதிப்பு குறித்து அளித்த தகவலில் தன்னிடம் சொந்த கார் மற்றும் வீடு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி ராகுல்காந்தியின் சொத்துமதிப்பு 9.24 கோடி அசையும் சொத்துகளும், 11.15 கோடி ரூபாய் அசையா சொத்துகளும் ஆகும். ராகுல்காந்தியிடம் சொந்த வாகனம், அடுக்குமாடி குடியிருப்பு இல்லை.
கையில் 55 ஆயிரம் ரூபாய் பணமும், வங்கியில் 26.25 லட்ச ரூபாய் டெபாசிட்டும் உள்ளது. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் ஷேர்மார்கெட் பங்குகள், 3.81 கோடி மதிப்பில் ம்யூச்சுவல் பண்ட் முதலீடுகள் உள்ளது. 15.21 லட்சம் ரூபாய்க்கு தங்க பத்திரங்களும், 4.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் உள்ளன.
இதுதவிர 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் மற்றும் சகோதரியுடன் பங்கு உள்ள ஒரு விவசாய நிலமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K