1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. International flight passengers gets controls from Central Government

ஓமைக்ரான் அச்சுறுத்தல்: சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!!

ஓமைக்ரான் அச்சுறுத்தல்
ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச விமான பயணிகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விமான நிலையத்திலேயே வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா! – ஒமிக்ரானா என பரிசோதனை!