திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (21:19 IST)

மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் – எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு

மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து, வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், வேளாண் சட்டங்க, சிஏஏ. காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தல், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் சிலிண்டர்கள் விலை அதிகமானது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்  குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில்  நடைபெற்ற எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில், மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து, வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.