சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (08:23 IST)

சில்லறை விலைக்கு ரேஷனில் கியாஸ் சிலிண்டர்: சாத்தியமா?

சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம். 

 
ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்னொரு பக்கம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் ரூபாய் 25 சமையல் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் இந்த மாதம் மீண்டும் ரூபாய் 15 உயர்ந்து சமையல் சிலிண்டர் விலை ரூபாய் 915.50 என விற்பனையாகி வருகிறது. 
 
இந்நிலையில் சிறிய கியாஸ் சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்து உள்ளார்.