1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Indians rescued from Ukraine

உக்ரைனிலிருந்து தப்பிய இந்தியர்கள்; ஆபரேஷன் கங்கா! – ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு!

India
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்கள் 5வது முறையாக விமானம் மூலமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை விமானம் மூலமாக மீட்க மத்திய அரசு “ஆபரேஷன் கங்கா” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் உக்ரைனின் எல்லைப்பகுதிகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை நான்கு விமானங்கள் மூலமாக பலர் மீட்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து நேற்று ருமேனியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து 1,156 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
எல்லை மீறிய ரஷ்யா; ஊடக விளம்பரத்தை தடை செய்த கூகிள்!