செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:32 IST)

உக்ரைனுக்கு மேலும் 54 மில்லியன் டாலர் நிதியுதவி – அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்ய போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 54 மில்லியன் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் போர் காரணமாக உக்ரைன் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறும் நிலை உள்ளது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் மக்களுக்கு உதவுவதற்காக அமெரிக்கா முன்னதாக 600 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மனிதாபிமான அடிப்படையில் 54 மில்லியன் டாலர் உக்ரைனுக்கு வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.