1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (21:36 IST)

தொடக்க ஆட்டக்காரர்களை இழந்த இந்தியா.,. ஸ்ரேயாஸ் ஐயர் நிதானம்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்திருந்தது.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் 21 பந்துகளில் 41 ரன்களோடு களத்தில் இருக்கிறார். இந்தியா 8 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.