தொடர்புடைய செய்திகள்
- முறை தவறிய காதல் : ரயிலில் பாய்ந்து இளஞ்சோடி தற்கொலை : திருச்சியில் அதிர்ச்சி
- செங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து
- 2000 மக்களின் உயிரை காப்பற்றிய 9 வயது சிறுமி!
- ரயில்வே ஸ்டேஷனில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் அபராதம் - இன்று முதல் அமல்
- தலைமறைவாகி 50வது நாள் ; எஸ்.வி.சேகருக்கு பாராட்டு விழா : வச்சு செய்யும் நெட்டிசன்கள்
ரயிலில் சென்ற ராணுவ வீரர்கள் தலைமறைவா? விசாரணையில் ரயில்வே காவல்துறை
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்த 10 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதிக்கு சிறப்பு ரயிலில் 83 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். முகல்சராய் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டபோது வீரர்களை எண்ணும் பணி நடந்தது.
அப்போது 83 வீரர்களில் 10 பேர் குறைவாக இருந்துள்ளனர். மாயமான 10 வீரர்களும் பர்தமன் மற்றும் தன்பாத் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது மாயமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து மாயமான 10 வீரர்கள் மீது தலைமறைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
