1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 ஜூன் 2018 (19:21 IST)

கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவிடம் பணிந்ததா இந்தியா?

கச்சா எண்ணேய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இராக், சவுதி அரேபியாவை அடுத்து இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து பெறப்படுகிறது.  
 
இந்நிலையில், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவது தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  
 
அந்த வகையில், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுமையாக நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தது.
 
இதனையடுத்து, அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இதுகுறித்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டும் இப்போது அறிக்கை சென்றுள்ளதாம். இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.