1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:27 IST)

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில்.. 2023ல் ஆரம்பம்

metro
இந்தியாவின் முதல் நீருக்கடியில் ஓடும் மெட்ரோ ரயில் திட்டம் 2023 ஆம் ஆண்டு தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொல்கத்தாவின் கிழக்கு மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒன்றான ஆற்றில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 
 
45 விநாடிகளில் 520 மீட்டர் நீருக்கடியில் அமைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையை கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த ரயில் இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran