திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (18:33 IST)

அடையாறு பேருந்து பணிமனையில் வணிக வளாகமா? மெட்ரோ நிர்வாகம் மறுப்பு!

adaiyar depot3
அடையாறு பேருந்து டிப்போவில் 9 அடுக்கு வணிகவளாகம் கட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தியை அடையாறு பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
 
சென்னையின் பழமையான பணிமனைகளில் ஒன்று அடையார் பணிமனை ஒன்றும் அதில் வணிக வளாகம் அமைக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. சென்னையிலுள்ள அடையாறு பேருந்து பணிமனை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 9 மாடி வளாகம் அமைக்கப்பட உள்ள தகவல் உண்மை தன்மை இல்லை 
 
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் பல்வேறு பேருந்து பணிமனைகள் உள்ளன. இவற்றில் அடையாறு பணிமனை பழமையானது. இந்த பழமையான பேருந்து பணிமனையில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பாக எந்தவித பணிகளும் திட்டமிடவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran