1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. vandhe Bharath train opening in kolkatta

கொல்கத்தாவில் வந்தே பாரத் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்

vandhe
இந்தியாவில் ஏற்கனவே 7 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரும் நிலையில் நாளை முதல் கொல்கத்தாவில் வந்தே பாரத்  ரயில் சேவையை தொடங்க உள்ளதாகவும் இந்த சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொல்கத்தாவில் ஹவுரா முதல் நியூ ஜகல்புரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார் 
 
அதேபோல் கொல்கத்தா மெட்ரோ ரயிலையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கொல்கத்தாவில் வந்தே பாரத் ரயிலை அப்பகுதி மக்கள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரொனா உறுதி!