1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai metro train track agreement signed

சென்னை மெட்ரோ ரயில்: ரயில் தண்டவாளம் அமைக்க ரூ.200 கோடியில் ஒப்பந்தம்!

metro
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்டமாக சுரங்கம் தோண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இதற்காக சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது என்பதும் ஒரு சில இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியில் கோயம்பேடு முதல் மாதம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்புப் பாதை அமைக்க ரூபாய் 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து வெகு விரைவில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பயணிகளுக்காக இயக்கப்படும் என்று தெரிகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அரசு ஆணையிட வேண்டும் -விஜயகாந்த்