1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India corona cases and death

20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: இந்திய நிலவரம்

India
இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 5,221 ஆக உயர்ந்துள்ள நிலையில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். 722 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து டெல்லியில் 2,248 பேரும், குஜராத்தில் 2,407 பேரும், ராஜஸ்தானில் 1,888 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,574 ஆக உள்ளது. தமிழகம் 1,629 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 20,471 ஆக உள்ளது. 3,960 பேர் குணமடைந்துள்ள நிலையில் 652 பேர் உயிரிழந்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கணையத்தை பாதுகாக்க என்ன உணவுகளை சாப்பிடுவது நல்லது...?