புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (17:49 IST)

2 ஆண்டுகள் சுற்றுலாத் துறை பாதிக்கப்படலாம்! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சுற்றுலாத்துறை பாதிப்பின் தாக்கம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கொடைக்கானல், மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, வேலூர், திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட மாநிலங்கள் சுற்றுலாவால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக உள்ளன. இப்போது கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாத்துறையும் அதுசார்ந்த தொழில்களும் முடங்கியுள்ளன.

இப்போது கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகத்தில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைவாழ்ப் பகுதிகளில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நேரம். ஆனால் அந்த பகுதிகள் தற்போது உள்ளூர் மக்களே வெளிவர முடியாத சூழலில் உள்ளன. இந்நிலையில் சுற்றுலாத்துறை முன்பு போல் செயல்பட 2 ஆண்டுகள் ஆகலாம் என சுற்றுலாத் துறை சார்ந்துள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு விலக்கப்பட்டாலும் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளிலேயே ஆர்வம் காட்டுவர். சுற்றுலா அவர்களின் பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றுவிடும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.