தொடர்புடைய செய்திகள்
- ஏழைகளுக்கு ரூ.7,500 கோடி! – மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் குழு பரிந்துரை!
- ராணுவ மரியாதையுடன் உடலடக்கம்: மருத்துவர்களை கவுரவிக்கும் ஒடிசா!
- ஊரடங்கில் மோட்டாரை திறக்க வந்த ரோஜா: சமூக ஆர்வலர்கள் கண்டனம்
- லாக்டவுனை நேசிக்கிறேன் - பிகினியில் ரசிகர்களை வசியம் செய்யும் ராதிகா ஆப்தே!
- ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்படும் ஆண்கள்! முதல்வருக்குக் கடிதம்!
காலை வாறியதா ரேபிட் கிட் சோதனை? – சோதனையை நிறுத்த அறிவிப்பு!
கொரோனா சோதனைகளுக்காக பயன்படுத்தப்படும் ரேபிட் கருவிகள் தவறான முடிவுகளை காட்டுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் சோதனையை நிறுத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரேபிட் பரிசோதனை கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக லட்சக்கணக்கில் ரேபிட் கருவிகள் சீனாவிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரேபிட் கருவிகளின் முடிவுகள் மாறுபட்டதாக இருப்பதாக ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்கள் குற்றம் சாட்டியுள்ளன. 2% முதல் 78% வரை தவறான முடிவுகளை ரேபிட் கிட் காட்டுவதாக வெளியான தகவலை அடுத்து ராஜஸ்தானில் ரேபிட் கிட் சோதனை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா முழுவதும் இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட் பரிசோதனைகளை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மீண்டும் ரேபிட் கிட பயன்படுத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
