செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (16:28 IST)

ஏழைகளுக்கு ரூ.7,500 கோடி! – மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் குழு பரிந்துரை!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.7,500 கோடி வங்கி கணக்குகள் மூலமாக செலுத்துவது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளை முன்னிறுத்தியுள்ளது மன்மோகன் சிங் குழு.

நாடு முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பொருளாதாரரீதியாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், பொருளாதர சரிவிலிருந்து மீளவும் மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆலோசித்துள்ளது.

ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய அந்த குழுவின் முதற்கட்ட ஆலோசனை நடந்து முடிந்த நிலையில், முன்னாள் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் காணோலி காட்சி மூலம் பேட்டியளித்தார்.

அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புத்துயிர் ஊட்டுதல், தானிய கொள்முதல், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏழை மக்களின் வங்கி கணக்குகளில் ரூ.7,500 கோடி ரூபாய் அளவிலான உதவித் தொகை வரவு வைக்கப்பட வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிபாரிசுகளை மொத்த அறிக்கையாக மத்திய அரசிடம் விரைவில் ஒப்படைக்க இருப்பதாக காங்கிரஸார் தெரிவித்துள்ளனர்.