1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (16:47 IST)

#ரஜினி_ஒரு_சகாப்தம் டுவிட்டரில் டிரெண்டிங் செய்த ரசிகர்கள் !

நடிகர் ரஜினி நாற்பது வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது சூப்பர் ஸ்டார் இமேஜிக்கு அப்போதில் இருந்து இப்போது வரை பல நடிகர் போட்டி போட்டாலும் அந்த சூப்பர் ஸ்டார் இமேஜிக்கு ரஜினி ஒருவர்  மட்டும்தான் பொருந்திப்போகக் கூடுயவராக உள்ளதாக அவரது  ரசிகர்கள் ரஜினி ஒரு சகாப்தம்  என்ற பெயரில் ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில்  டிரெண்டிங்ன் செய்து வருகின்றனர்.

இந்த டிரெண்டிங்கில் ஒரு செய்தித் துணுக்கு வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,  சிவாஜியை கௌரவிக்கவில்லை என ஒரு நிகழ்ச்சி விழாவின் மேடையிலேயே ரஜினி பகிரங்கமாகப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளது.
அவரது காலக்கட்ட ஹீரோக்கள் முதற்கொண்டு, இன்றைய இளௌஇய தலைமுறை நடிகர்கள்  வரை பலரும் அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பெற போட்டி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால், என்னவோ தமிழக ரசிகர்களும் அவரை தான் சூப்பர் ஸ்டார் இமேஜில் வைத்து அழகுபார்க்கிறார்கள் என ரசிகர்கள் ரஜினியின் பெருமைகளை அடுக்கிப் பேசி ’’ரஜினி ஒரு சகாப்தம்’’ என ஹேஸ்டிக்கில் பதிவிட்டு பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.