செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (17:25 IST)

டிராஃபிக்கில் ஸ்தம்பித்த ஹைதராபாத்: சொற்ப காரணத்தால் திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

ஹைதராபத்தில் கலடை ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு செல்ல மக்கள் ஹைத்ராபாத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு விரைய ஹைதரபாத் டிராஃபிக்கில் ஸ்தம்பித்தது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 
ஸ்வீடனின் புகழ்பெற்ற இகியே பர்னிச்சர் பிராண்ட் நிறுவனம் ஒன்று இந்தியாவின் ஹைதராபாத்தில் தனது மெகா ஸ்டோரைத் திறந்தது. இதில் 1000 பேர் அமரக்கூடிய பெரிய ரெஸ்டாரண்ட் உள்ளது. 
 
இந்த பர்னிச்சர் மெகா ஸ்டோருக்கு மக்கள் விரைய வரலாறு காணாத அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 
 
ஆனால், பலர் இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இகியே பர்னிச்சர் மெகாஸ்டோர் ஒன்றும் பொருட்காட்சி அல்ல, அது வெறும் ஒரு ஸ்டோர். 40 நிமிடங்களில் வீட்டுக்கு செல்ல வேண்டியது போக்குவரத்து நெரிசலினால் 2 மணி நேரம் ஆகிவிட்டது என்று தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை பதிவிட்டு வருகின்றனர்.