2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட கணக்கெடுப்பில் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள் இதோ:
1. வீட்டை அடையாளம் காண்பதற்கான விவரங்கள்
கணக்கெடுப்பு அதிகாரிகள் முதலில் வீட்டை அடையாளம் காண்பதற்கான அடிப்படை விவரங்களைப் பதிவு செய்வார்கள்:
கட்டிட எண்: (நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு அல்லது கணக்கெடுப்பு எண்)
கணக்கெடுப்பு வீட்டு எண்: (Census house number)
2. வீட்டின் வகை, கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிலை
வீட்டின் கட்டமைப்பு குறித்த கேள்விகள்:
தரைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருள்.
சுவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருள்.
கூரைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருள்.
வீட்டின் பயன்பாடு: (குடியிருப்பு, வணிகம், இரண்டும் கலந்தது, போன்றவை)
வீட்டின் ஒட்டுமொத்த நிலை: (நல்ல நிலை, சுமாரான நிலை அல்லது பழுதடைந்த நிலை)
3. குடும்ப அமைப்பு மற்றும் சமூக விவரங்கள்
குடும்பம் குறித்த அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும்:
குடும்ப எண்.
குடும்பத்தில் பொதுவாக வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை.
குடும்பத் தலைவரின் பெயர்.
குடும்பத் தலைவரின் பாலினம்.
குடும்பத் தலைவர் பட்டியலினத்தவர், பழங்குடியினர் அல்லது இதர பிரிவைச் சேர்ந்தவரா என்ற விவரம்.
4. வீட்டின் உரிமை, அறைகள் மற்றும் வசதிகள்
வீட்டின் உரிமை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள்:
வீட்டின் உரிமை நிலை: (சொந்த வீடு, வாடகை வீடு அல்லது இதர வகை)
குடும்பத்தினர் மட்டும் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் அறைகளின் எண்ணிக்கை.
குடும்பத்தில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை.
குடிநீருக்கான முக்கிய ஆதாரம்.
குடிநீர் கிடைக்கும் இடம்/வசதி.
மின்சாரத்திற்கான முக்கிய ஆதாரம் (ஒளி வசதி).
கழிப்பறை வசதி உள்ளதா என்ற விவரம்.
பயன்படுத்தும் கழிப்பறையின் வகை.
கழிவுநீர் வெளியேற்றும் அமைப்பு
குளியல் வசதி உள்ளதா என்ற விவரம்.
சமையலறை மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளதா என்ற விவரம்.
சமைக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்.
5. குடும்பச் சொத்துக்கள் மற்றும் தொடர்பு விவரங்கள்
குடும்பத்தின் வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு குறித்த கேள்விகள்:
ரேடியோ அல்லது டிரான்சிஸ்டர் வசதி.
தொலைக்காட்சி வசதி.
இணையதள வசதி
லேப்டாப் அல்லது கணினி வசதி.
தொலைபேசி, மொபைல் போன் அல்லது ஸ்மார்ட்போன் வசதி.
மிதிவண்டி , ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் அல்லது மொபட் வசதி.
கார், ஜீப் அல்லது வேன் வசதி.
குடும்பத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய தானியம் .
மொபைல் எண்: (கணக்கெடுப்பு தொடர்பான தகவல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்).
Edited by Siva