1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Govt Issues Strict Advisory to Private TV Channels Against Programme Code Violations and Live Anti-Terror Coverage

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. டிவிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
கேபிள் தொலைக்காட்சி விதிகள் மற்றும் நிரல் குறியீட்டை பின்பற்றுமாறு தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்  புதிய எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. 
 
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த நேரலை ஒளிபரப்பு, வன்முறைச் சம்பவங்கள், இயற்கை இடர்பாடுகள் மற்றும் குற்றச் செயல்களைத் தெரிவிக்கும் போது ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
 
குறிப்பாக, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது நேரலை ஒளிபரப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் வழங்கும் தகவல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும், குற்றச் செயல்கள் மற்றும் விபத்துகளின் போது வன்முறைக் காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காண்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாலியல் குற்றப் பாதிப்புக்குள்ளானவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
 
தொலைக்காட்சி விவாதங்களின் போது மத நல்லிணக்கத்தைப் பேணவும், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது துல்லியத் தன்மையைக் கடைப்பிடிக்கவும் ஊடகங்களுக்கு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
மட்டமான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார் ராகுல் காந்தி: ஸ்மிருதி இரானி கண்டனம்...