செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 நவம்பர் 2025 (15:28 IST)

மீண்டும் ஒரு அனைத்து கட்சி கூட்டம்: தேதி அறிவிப்பு..!

மீண்டும் ஒரு அனைத்து கட்சி கூட்டம்: தேதி அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் பரப்புரைகள் நடத்துவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக, அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.  வருகின்ற நவம்பர் 6 அன்று இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.
 
இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குவார்கள்.
 
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்களின் 'ரோடு ஷோ' மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
 
பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை காவல்துறை 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே, அரசியல் கட்சிகளுடன் கலந்து பேசி புதிய நெறிமுறைகளை இறுதி செய்ய தமிழக அரசு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
 
 
Edited by Mahendran