திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (16:05 IST)

தங்கம் விலை உயர்வு....

சர்வதேசச் சந்தையில் முதலீட்டாளர் தங்கம் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயந்துவருகிறது.

சமீபத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை,  கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் சுபநிகழ்வு வைத்துள்ள மக்களுக்கு தங்கத்தின் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செனையில் ஆபரணத் தங்கத்தின் விலை   உயர்ந்துள்ளது.  இன்று காலை நேர நிலவரப்படி  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது.

எனவே ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,506 விற்பனை செய்யப்படுகிறது.  ஒருசவரன் விலை ரூ. 36,048 க்கு விற்பனை செய்யப்படுகிறது.