வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (22:22 IST)

தங்கம் விலை மீண்டும் உயர்வு..மக்கள் அதிர்ச்சி

சர்வதேசச் சந்தையில் முதலீட்டாளர் தங்கம் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயந்துவருகிறது.

சமீபத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை,  கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் சுபநிகழ்வு வைத்துள்ள மக்களுக்கு தங்கத்தின் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒருகிராம் 4,485 க்கும், ஒரு சவரன் ரூ.35,880க்கும் விற்கப்படுகிறது.

அதேபோல் வெள்ளியில் விலையும் அதிகரித்துள்ளது, ஒருகிராம் வெள்ளி.ரூ.74.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,900க்கும் விற்பனையாகிறது.