1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold prices rise again shocking people

மீண்டும் தங்கம் விலை உயர்வு...மக்கள் அதிர்ச்சி

Gold prices rise again
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த 4 நாட்களாக சரிவை சந்திருந்த தங்கம் விலை இன்று உயர்வை கண்டுள்ளது.  இன்று காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,435-க்கும், சவரன் ரூ.35,480க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி  சென்னையில் ஒரு சவரனுக்கு  ரூ.160 உயர்ந்துள்ளது.  எனவே ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4450 க்கும், ரூ.35, 600க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.40க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை சில நாட்களாகக் குறைந்ததாக எண்ணிய மக்கள் இன்றைய விலை உயர்வைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
கமல்-கருணாஸ் திடீர் சந்திப்பு: தீவிர ஆலோசனை