1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Girl dead due to cellphone blast

செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்.. 8 வயது சிறுமி பரிதாப பலி..!

செல்போன்
செல்போனை பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுமி திடீரென அந்த செல்போன் வெடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் என்ற பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவர் தனது தந்தையின் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார் அவர் அதில் கேம்ஸ் விளையாடியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் திடீரென அந்த செல்போன் வெடித்ததாகவும் இதனை அடுத்து படுகாயம் அடைந்த சிறுமியை அவரது பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிகிறது. ஆனால் சிகிச்சையின் பலன் இன்றிய அவர் காலமானார்
 
மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமியின் மறைவு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் செல்போன் வெடித்ததால் சிறுமி பலியானதை எடுத்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் கேட்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. தமிழகம் சாதனை..!