வெள்ளி, 13 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (07:41 IST)

பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வன் வந்திருக்காது… மணிரத்னம் பேச்சு!

பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வன் வந்திருக்காது… மணிரத்னம் பேச்சு!
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இப்போது இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு கலந்துகொண்டு வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மணிரத்னம் “நான் ஏற்கனவே இதை சொல்லி இருக்கிறேன். இருந்தாலும், திரும்பவும் ராஜமௌலிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர் பாகுபலியை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்காவிட்டால், நானும் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக எடுத்திருக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.