திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (10:19 IST)

செல்வமகள் சேமிப்பு திட்டம்.. தமிழகம் சாதனை..!

selvamagal
செல்ல மகள் சேமிப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிகமாக முதலீடு செய்ததில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பெண் குழந்தைகளின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது செல்வமகள் சேமிப்பு திட்டம்.  இந்த திட்டத்தில் 10 வயது பெண் குழந்தைகளுக்காக சேமிக்கலாம் என்பதும் இந்த திட்டத்தின் கீழ் மாதம் 100 ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த திட்டம் இந்தியா முழுவதும் பெறும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 38.38 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக கணக்குகள் தொடங்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by siva