திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (08:08 IST)

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 3 வாலிபர்கள் பரிதாப பலி: திருவாரூரில் சோகம்..!

Train Track
திருவாரூரில் மூன்று வாலிபர்கள் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய நிலையில் அவர்கள் பரிதாபமாக ரயில் மோதியதால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை திருவிழா தற்போது நடைபெற்று வருவதை அடுத்து இந்த விழாவிற்கு ஏராளமான வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த விழாவை காண மூன்று வாலிபர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் மூவரும் இரவில் அசதியால் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தின் மீது தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்கள் மீது ஏறியதை அடுத்து மூவரும் பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ரயிலில் அடிபட்டு பலியான மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருவிழாவுக்கு வந்த மூன்று வாலிபர்கள் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதால் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

Edited by Siva