தொடர்புடைய செய்திகள்
- ”தோனி அவுட்டானது எங்களுக்கு ஒரு லக்”..மகிழ்ச்சியில் நியூஸிலாந்து வீரர்
- ”ஓரணியாக செயல்பட தவறிவிட்டோம்”… வேதனையில் ரோஹித் ஷர்மா
- ”ஆர்.எஸ்.எஸ்” க்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்"… மனம் திறந்து நன்றி தெரிவித்த ராகுல்
- கொத்தா வந்து விழுந்த விக்கெட்டுகள்: காத்திருந்து காய் நகர்த்தும் அமித்ஷா!
- இன்று அத்திவரதரை சந்திக்கிறார் ஜனாதிபதி..
ஓய்வுக்குப் பின் பாஜகவில் ஐக்கியம் – டிசம்பரில் தேர்தல் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாஜகவில் ஐக்கியம் ஆக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் இந்த உலகக்கோப்பையோடு சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஒய்வுப் பெறப்போவதாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் தோனி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவரை பாஜக வில் இணைக்க முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட்டில் இப்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி டிசம்பர் மாதத்தோடு முடிய இருக்கிறது. அதையடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரைக் களமிறக்க தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் பஸ்வான் இதை உறுதிப்படுத்தும் விதமாக தோனியிடம் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
