யார் இந்த அன்பில் மகேஷ்? உதயநிதிக்கு ரைட் ஹேண்டா??
உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பக்கபலமாக இருக்கும் முக்கிய நபர் அன்பில் மகேஷ். யார் இந்த அன்பில் மகேஷ் என பார்ப்போம்...
அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். அன்பில் மகேஷ் குடும்பம் திமுக குடும்பத்தின் நட்பு வாழையடி வாழையாக தொடரும் ஒரு உறவாக உள்ளது.
ஆம், மறைந்த கருணாநிதியின் முக்கியமான நண்பர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம். இவரது மகன் அன்பில் பொய்யாமொழி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர். அன்பில் பொய்யாமொழி மகனான அன்பில் மகேஷ் உதயநிதியின் நெருங்கிய நண்பர்.
அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதியின் நட்பின் நெருக்கமும் நம்பிக்கையும் எவ்வளவு என்றால் உதயநிதி ஸ்டாலினின் அகில இந்திய ரசிகர் மன்றத்தை கவனித்து கொள்ளும் பொருப்பை வழங்கும் அளவிற்கு இருந்தது.
தற்போது, உதயநிதியின் அரசியல் பயணத்திலும் இவர் முக்கிய பங்கையாற்ற உள்ளார். திமுகவின் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரான அன்பில் மகேஷ் உதயநிதி இளைஞர் அணி செயலராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்தே பக்க பலமாக இருந்து வருகிறார்.
தற்போது அன்பில் மகேஷ்தான் காலியாக உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் பதவிகளை நிரப்புவது, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது, ஆக்டிவ்வாக இல்லாத நிர்வாகிகளை களையெடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.