புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (10:46 IST)

இன்று அத்திவரதரை சந்திக்கிறார் ஜனாதிபதி..

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வருகை புரிகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர், ஜூலை 1 ஆம் தேதி முதல் காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் 11 ஆம் நாளான நேற்று பட்டாடையில் காட்சித் தந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று மதியம் 3 மணி அளவில், அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வருகிறார். அவரது வருகையினால் இன்று காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கான பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று காலை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தனது குடும்பத்தாருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார். மேலும் அவரது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் எனவும் அத்திவரதரின் பாதத்தில் திரைப்படத்தின் “கிளாப் போர்டை” வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.