புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (15:47 IST)

கொத்தா வந்து விழுந்த விக்கெட்டுகள்: காத்திருந்து காய் நகர்த்தும் அமித்ஷா!

கோவாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க அமித்ஷா தலைமையில் அலோசனை நடைபெற்று வருகிறதாம். 
 
கோவா மாநிலத்தில் பாஜக கூட்டனி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கல் விலகி பாஜக முக்கிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். 
 
10 எம்.எல்.ஏ-க்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் கோவா சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் சட்டபேரவையில் தனிப்பெரும் கட்சி என்ற பலத்தி இழந்துள்ளது. 
இந்நிலையில், புதிதாக கட்சியில் இணைந்துள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க அமித்ஷா தலைமையில் அலோசனை நடைபெற்று வருகிறதாம். இந்த ஆலோசனை வெற்றிகரமாக் முடியும் பட்சத்தில் கோவா அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிகிறது.