தொடர்புடைய செய்திகள்
- ஷாருக் கான் படத்தோடு மோதும் பிரபாஸின் சலார்… புதிய ரிலீஸ் தேதி இதுதான்!
- 'எந்தப் பிரச்சனையும் சந்திக்க தயார்- எடப்பாடி பழனிசாமி
- காங்கிரஸின் மோசமான ஆட்சியைப் பார்க்காத அதிர்ஷ்டசாலிகள்.. மபி இளைஞர்கள் குறித்து மோடி..!
- கர்நாடகாவில் குடிதண்ணீர் கூட இல்லை! – பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் கடிதம்!
- பாஜக போடு தோப்புக்கரணம்னு சொன்னா, போடுபவர்கள் தான் அதிமுகவினர்: முதல்வர் ஸ்டாலின்
காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்: முன்னாள் பிரதமர் கடிதம்..!
காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமரான தேவகவுடா ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய முயற்சி செய்தார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கர்நாடகாவில் அடுத்த 9 மாதங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை என்றும், குடிக்க தண்ணீர் இல்லாதபோது தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது தவறான முடிவு என்றும், காவிரி விஷயத்தில் பொங்கி எழும் போராட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவகவுடா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காவிரி பிரச்சனையில் தலையிட்டு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்றும், உடனே 5 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைத்து அணை நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
