வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (19:15 IST)

பாஜக போடு தோப்புக்கரணம்னு சொன்னா, போடுபவர்கள் தான் அதிமுகவினர்: முதல்வர் ஸ்டாலின்

Stalin
போடு தோப்புக்கரணம்னு பாஜக சொன்னா.. இந்தா எண்ணிக்கோன்னு சொல்லிட்டே அதிமுக தோப்புக்கரணம் போடுவாங்க என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசினர்.
 
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ‘தன்னுடைய ஆட்சியின் சாதனை என சொல்வதற்கு பிரதமர் மோடியிடம் எதுவும் இல்லாத காரணத்தால், மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து கணக்கு காட்ட பார்க்கிறார்
 
மகளிர் உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது. நீங்க தேடிப் போற ஒவ்வொரு வீட்டுலயும், நம்ம அரசோட திட்டங்களால பயனடைந்தவர்கள் இருப்பாங்க ‘என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
 
 ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்முடைய இளைஞர்களை எல்லாம் பக்கோடா விற்க செல்லுங்கள் என்று கூறியவர் தான் பிரதமர் மோடி என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
 
Edited by Siva