திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2023 (16:52 IST)

காங்கிரஸின் மோசமான ஆட்சியைப் பார்க்காத அதிர்ஷ்டசாலிகள்.. மபி இளைஞர்கள் குறித்து மோடி..!

PM Modi
மத்திய பிரதேசம் மாநிலங்கள் காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை பார்க்காத அதிர்ஷ்டசாலிகள் என பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சி செய்து வருகிறது. எனவே தற்போது 20 வயது வரை உள்ள இளைஞர்கள் இதுவரை பாஜக ஆட்சி தவற வேற எந்த ஆட்சியையும் பார்த்திராத இளைஞர்களாக உள்ளனர். 
 
இந்த நிலையில் இன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி  கடந்த 20 ஆண்டுகளாக இளைஞர்கள் பாஜக ஆட்சியை பார்த்து இருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை பார்க்காத அதிர்ஷ்டசாலிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். '
 
இனிமேலும் பாஜக ஆட்சியை தான் அவர்கள் பார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சுதந்திரத்திற்கு பின்னர் மத்திய பிரதேசம் மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் பல ஆண்டுகளாக பின்தங்கிய மாநிலம் ஆக மாற்றிவிட்டது என்றும் ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பிரதேசம் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 
Edited by Mahendran