'எந்தப் பிரச்சனையும் சந்திக்க தயார்- எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைவர்களான அண்ணாத்துரை, ஜெயலலிதா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய சர்ச்சை கருத்துகளை அடுதது, வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியை அடுத்து, பாஜக, அதிமுக இடையே கூட்டணி தொடருமா எனக் கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து, டெல்லி சென்ன முன்னாள் அமைச்சர்கள் பாஜக மாநில அண்ணாமலையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு டெல்லி தலைமை மறுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறிதால் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, எந்தப் பிரச்சனையையும் சந்திக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவுடன் இன்றைக்கு மட்டுமல்ல இனிமேல் என்றைக்குமே கூட்டணி கிடையாது என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றும், கூட்டணி முறிவால் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.