புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 8 பிப்ரவரி 2020 (09:08 IST)

டெல்லியில் வாக்குப்பதிவு தொடங்கியது : ஒரே கட்டமாக தேர்தல்!

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

டெல்லி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே பயங்கரமான போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸை விட பாஜக – ஆம் ஆத்மி இடையே டெல்லியில் ஆட்சியமைப்பதில் தீவிரமான போட்டி காணப்படுகிறது. இதற்காக இரண்டு கட்சிகளும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளன. மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 750 வாக்குச்சாவடிகளில் 2,689 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக காணப்படுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 11ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. தற்போது மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர்.