புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:21 IST)

பிரதமரை சந்திக்க இந்தியா வரும் ராஜபக்‌ஷே: 4 நாட்கள் சுற்றுப்பயணம்

இலங்கை பிரதமர் ராஜபக்‌ஷே நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்‌ஷே. பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்கிறார். இன்று இந்தியா வந்து குடியரசு தலைவரை சந்திக்கும் ராஜபக்‌ஷே, நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவுகள், எல்லை சார் ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்தியாவில் உள்ள புத்தகயா, திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும் சுற்று பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் ராஜபக்‌ஷே.