செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (20:35 IST)

தேர்தலில் கூடுதல் இடங்களை பெற ஸ்ரீராமர் உதவட்டும்; பாஜகவை கிண்டல் செய்யும் சிவசேனா

சிவசேனா

டெல்லி தேர்தலில் கடந்த முறையை விட கூடுதலான இடங்களை பெற ஸ்ரீ ராமர் உதவட்டும் என சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிக்கை கிண்டல் செய்துள்ளது.

டெல்லியில் வருகிற 8 ஆம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்தது.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக அதிகமான இடங்களை பெற ஸ்ரீராமர் உதவட்டும் என சிவசேனா தனது சாம்னா பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தேர்தலை ஒட்டி மக்களவையில் ராமர் கோயிலுக்கான அறக்கட்டளையை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தேர்தலுக்காகவே ராமர் கோவில் பற்றிய அறிவிப்பை பாஜக வெளியிட்டுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளது.