புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (14:56 IST)

பாலகோட்டில் மீண்டும் தீவிரவாதிகள் பயிற்சி: உளவுத்துறை எச்சரிக்கை!

பாலகோட் தாக்குதல் நடந்த பகுதி
இந்தியாவால் குண்டு வீசி அழிக்கப்பட்ட பாலகோட் பகுதியில் மீண்டும் தீவிரவாத பயிற்சிகள் நடைபெற்று வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக களமிறங்கிய இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடமாக அறியப்பட்ட பாகிஸ்தானின் எல்லைக்குட்பட்ட பால்கோட் பகுதியில் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இந்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் தாக்குதல் நடந்த பாலகோட் பகுதியில் மீண்டும் பயங்கரவாதிகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மசூத் அஸாரின் உறவினர் யூசுப் அஸாரின் தலைமையில் 27 பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும், இந்தியாவுக்குள் ஊடுறுவ அவர்கள் முயற்சி செய்யலாம் எனவும் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.