புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:28 IST)

தினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா!!

2021 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பணிகள் துவங்கிவிடும் என்பதால் சிறையில் இருந்தவாரே சசிகலா தேர்தல் பணிகள் துவங்கலாம் என முடிவெடுத்துள்ளாராம்
 
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா இன்னும் ஒன்றரை வருடம் சிறையில் இருக்க வேண்டும். அதாவது, 2021 ஆம் ஆண்டு பிப்.14 ஆம் தேதி சசிகலாவில் சிறை தண்டனை முடிவடைகிறது. 
 
அவர் வெளியே வருவதற்குள் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்காக பணிகள் துவங்கிவிடும் என்பதால் சிறையில் இருந்தவாரே சசிகலா தேர்தல் பணிகள் துவங்கலாம் என முடிவெடுத்துள்ளாராம். முதலில் எடப்பாடி பழனிச்சாமியை தன் பக்கம் இழுக்க சசிகலா முயற்சிப்பார் என கூறப்படுகிறது. 
அப்படியில்லையென்றால் பணத்தை இறைத்து முக்கிய ஆட்களை தன் பக்கம் இழுக்க முயற்சிக்க கூடும். ஆனால் இவை அனைத்தையும் தினகரனை மட்டுமே நம்பி சசிகலா செய்ய மாட்டார் எனவும். தனக்கு நெருக்கமான நம்பிக்கையான ஆட்கள் சிலரை இதற்காக நியமிக்க கூடும் என பேசப்படுகிறது. 
 
முக்கியமாக அதிமுக உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள கட்சியினரை குறிவைத்து சசிகலா தனது அரசியல் நகர்வை மேற்கொள்ள கூடும் எனவும் கூறப்படுகிறது.