புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (09:07 IST)

அடிக்க போறீங்களா? இருங்க ரெடி ஆயிடறேன்! – ராகுலை கிண்டலடித்த மோடி!

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி காங்கிரஸின் ராகுல் காந்தியை கிண்டல் செய்த சம்பவம் வைரலாகி உள்ளது.

மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் ”என்னை இன்னும் 6 மாதங்களில் யாரோ கட்டையால் அடிக்க போவதாக பேசி இருக்கிறார். இது கொஞ்சம் கடினமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே நான் 6 மாத காலங்கள் கூடுதலாக சூரிய நமஸ்காரம் செய்து என் முதுகை அடிவாங்க தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.

அப்போது ராகுல் காந்தி இடைமறித்து நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கிண்டலாக பதிலளித்த பிரதமர் “நான் 40 நிமிடங்களாக இங்கே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த ட்யூப் லைட்டுக்கு இப்போதுதான் மின்சாரம் வந்திருக்கிறது. பல ட்யூப் லைட்டுகள் இப்படிதான் இருக்கின்றன” என கூறியுள்ளார். மோடியின் இந்த கிண்டலை கேட்டதும் பாஜக எம்.பிக்கள் பலமாக சிரித்துள்ளனர்.