1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

2.5 லட்சத்தை கடந்த கொரொனா – ஒரே நாளில் 10 ஆயிரம் பாதிப்பு!

India
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் பல மாநிலங்களில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 7,135 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,095 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 206 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 85,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,060 பேர் பலியான நிலையில் 39,314 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 31,667 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 20,070 பேரும், டெல்லியில் 27,654 பேரும், ராஜஸ்தானில் 10,599 பேரும், மத்திய பிரதேசத்தில் 9,401 பேரும், உத்தர பிரதேசத்தில் 10,536 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா ஊரடங்கு: தம்பதிகளுக்குள் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்