தொடர்புடைய செய்திகள்
- கொரோனா சோதனை செய்துகொண்டாரா ஸ்டாலின்?
- பாஜகவில் சேர மாட்டேன், சாகும் வரை நான் அதிமுக தொண்டன் தான்: சத்யராஜ் பட இயக்குனர் அறிக்கை
- எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்
- சேலம் 8 வழிச்சாலை குறித்த அமைச்சரின் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் !
- ஜெ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது ? மருத்துவமனையில் இருந்து பாஸிட்டிவ் தகவல்!
கண்விழித்துப் பார்த்த ஜெ அன்பழகன் – திமுகவினருக்கு மகிழ்ச்சி செய்தி!
திமுக மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக வெண்ட்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 80% ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவரது செயற்கை சுவாச அளவு படிப்படியாக குறைத்து 40 சதவீத அளவுக்குக் கொண்டு வரப்பட்டது.
தற்போது மேலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 29% ஆக குறைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று அவர் கண்விழித்துப் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டதாகவும் அதைக்கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
