வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜூன் 2020 (09:16 IST)

கொரோனா சோதனை செய்துகொண்டாரா ஸ்டாலின்?

திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கு லேசான இருமல் இருந்த நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதையடுத்து பல இடங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார். அங்கு அவர் கையுறைகள் மற்றும் மாஸ்க்குகள் அணிந்துகொண்டு பாதுகாப்பாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக அவருக்கு லேசான் இருமல் ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவரை சென்று சந்தித்து கொரோனா சோதனை மேற்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சோதனை முடிந்து சில நாட்களிலேயே அவருக்கு நெகட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்ததாகத் தெரிகிறது. திமுகவின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.