தமிழக மின் வாரியத் தலைவர் இடமாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு!
சமீபத்தில் மின்வாரியத்தில் இருந்து வந்த பில்கள் சம்மந்தமாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் சமூகவலைதளங்களில் தங்களுக்கு மின் வாரியக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக பலரும் புகார எழுப்பினர். இதனால் மின்சார வாரியம் மீது அதிருப்தியான சூழல் உருவானது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த விக்ரம் கபூர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவுக்குத் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின்பகிர்மான கழக நிர்வாக இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்கிற ரீதியிலும் பேசப்பட்டு வருகிறது.