தொடர்புடைய செய்திகள்
- இந்தியா வந்ததும் “பீப்” சாப்பிட்டு கொண்டாடிய புலிகள்! – காட்டுக்கு செல்வது எப்போது?
- இந்தியா vs ஆஸ்திரேலியா… மொஹாலியில் இன்று முதல் டி 20 போட்டி!
- 61.75 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- சோழபுரம் பேரூராட்சி செயல்அலுவலரை இடமாற்றம் செய்யகோரி சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்
- பன்றி காய்ச்சல் பற்றி பதற்றம் வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
4 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்; 15 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,45,43,089 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,370 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,39,67,340 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 47,379 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
